Monday, August 30, 2010

அண்ணாமலை ரெட்டியார்

"காவடிச்சிந்து புகழ்" அண்ணாமலை ரெட்டியார்

முனைவர் சி.சேதுராமன்

இசைத் தமிழ், மாந்தர் நெஞ்சங்களை இசையவைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் "சிந்து இசை" என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து, நாடி, நரம்புகளைத் தூண்டித் துள்ளச் செய்யும். சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார் வரையிலும் ஏற்கச் செய்யும் ஒப்பற்ற இசை வடிவானது காவடிச் சிந்து.

இது புதியதொரு இலக்கிய விருந்தாகும். இப்புதிய விருந்தை உருவாக்கி வழங்கியவர் ஓர் இளைஞர். அவர் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். அவர் தான் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்.

தென்பாண்டிச் சீமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1860ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார். அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார். ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்கு தடையின்றி ஒப்பித்துவிட்டார். அதைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம்.

ஒரு முறை அண்ணாமலையார், வீட்டுப்பாடம் எழுதி, அதன் கீழ் "தமைய பருவதம்" என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, "அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?" என்று வினவினார். அதற்கு அண்ணாமலையார், "தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா" என்று பணிவுடன் கூறினார். அதைக் கேட்ட ஆசிரியர், "அப்பா அண்ணாமலை! உன் புலமைப் பசிக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று பயில்க" என்று ஊக்கப்படுத்தி, அவருக்கு விடைகொடுத்து அனுப்பினாராம்.

சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார். விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார், தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்த தண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை, அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார்.

தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், "இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.

அண்ணாமலையை சேற்றூர் அரசர் வடமலைத் திருவநாத சுந்தரதாசுத்துரையிடம் அழைத்துச் சென்று அவரைப் பற்றி பாடல்கள் பாடுமாறு அண்ணாமலையைப் பணித்தார். அண்ணாமலையார் பாடிய பாடல்களைக் கேட்ட அரசர், "இந்தச் சிறுவன் இவ்வளவு சிறந்த பாடல்களை எங்ஙனம் இயற்ற இயலும்! இவன் பாடிய பாடல்கள் இவனுடையது அல்ல என்று கருதுகிறேன்" என்றார். அரசரின் உரையைக் கேட்ட அடிகள் மனம் வருந்தினார். எவ்வாறேனும் அண்ணாமலையின் திறமையை அரசர் உணரும் வண்ணம் செய்ய வேண்டும் என்று கருதினார்.

அரசரைப் பார்த்து, "இவன் செய்யுள் இயற்ற வல்லவனா? ஆற்றல் இல்லாதவனா என்பதைத் தாங்கள் பரிசோதித்து உணரலாமே" என்றார். அரசரும் அண்ணாமலையைப் பார்த்து, "காரிகை என்னும் சொல் ஒரே செய்யுளில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்பட வருமாறு அகப்பொருள் துறை அமைய ஒரு கட்டளைக் கலிப்பா இயற்றுக" என்றார். அண்ணாமலை உடனே பாடினார். பாடலைக் கேட்டு மன்னர் அயர்ந்து போனார். அண்ணாமலையின் திறமை கண்டு வியந்தார். அவரது கவித்திறமை கண்ட அரசர், அவரை முகவூர் இராமசாமிப் புலவரிடம் இலக்கணம் கற்பதற்கு அனுப்பினார். அண்ணாமலையும் நாள்தோறும் அரண்மனையில் உணவருந்தி முகவூர் சென்று இலக்கணம் கற்று வந்தார். பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அதன் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டார். மேலும், அப்போது ஆதீனத்தில் இருந்த உ.வே.சாமிநாதய்யரிடம் நன்னூலும், மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணிய தேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார்.திருவாவடுதுறையிலிருந்து சென்னிக்குளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார்.

ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார்.மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார்.

வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சம காலத்தவர் ஆவர்.

"சீர்வளர் பசுந்தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ்அல் லாதினிய
தெள்ளமுதும் அயிலான்
போர்வளர் தடங்கையுறும் அயிலான் - அவன்
பொன்னடியை இன்னலற
உன்னுதல்செய் வாமே."

என்று தொடங்கிய பாடலை, ஒரு முறை கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது வழிநெடுகத் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றார்.

பாடல் கேட்ட அனைவரும் "முருகா முருகா" என்று கூறி மெய் மறந்தனர்.

எத்தனையோ பாடல்கள்! ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தம்! வெவ்வேறு மெட்டு, வெவ்வேறு துறை. எல்லாம் புதுமை, எதுகை, மோனைகள் வந்து ஏவல் கேட்டன.

இயைபுத்தொடை அடிதோறும் அணி வகுத்து நின்றது. அன்றிலிருந்து, "வாக்கிற்கு அருணகிரி" என்ற வாசகம், "வாக்கிற்கு அண்ணாமலை" என்று விரிந்தது. பழைய பாடல்களின் சாயல் அறவே இல்லாத புதுவகை நாட்டுப் பாடலாகக் காவடிச்சிந்து மலர்ந்தது.

அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச்சிந்துப் பாடல்களே ஆகும். காவடிச்சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகிவிட்டது.

வழிநடையில் பாடப்பட்ட காவடிச்சிந்துப் பாடல்களை எல்லாம் ஊற்றுமலையரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி, ஐந்து கவிகள் பாடியுள்ளார். காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய் கவ்வியது. அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்தும் நோய் நீங்கவில்லை.

1891ஆம் ஆண்டு தை மாதம் அமாவாசையன்று தமது 29வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம்பு நீங்கிப் புகழுடம்பு எய்தினார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நன்றி:- தினமணி

அண்ணாமலை ரெட்டியார்

அண்ணாமலை ரெட்டியார்

இயற்றிய

காவடிச் சிந்து

சிந்து என்பது இசைத் தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து உறுப்புகளால் ஆன யாப்பு விசேடம். அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும். காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். முருகனிடம் பிரார்த்தனை செய்து காவடி எடுத்துச் செல்வோர் வழியில் துதி செய்து பாடும் பாடல்களே காவடிச் சிந்து எனப்படுகின்றன. இந்த நூலை இயற்றியவர் அண்ணாமலை ரெட்டியார். இவர் திருநெல்வேலி சங்கர நயினார் கோவிலை அடுத்த சென்னிகுளம் என்னும் ஊரில் 1865 ஆம் ஆண்டு பிறந்தார். திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார். இவர் நோய் காரணமாக 1891ல், தம் 26ஆம் வயதில் காலமானார்.


காவடிச் சிந்து முதல் பதிப்பு அச்சிடுவதற்கு ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத் தேவர்பொருளுதவி செய்தபோது அவர்பேரில் ரெட்டியார் பாடிய பாடல்கள்

ஊற்றுமலையில் வாழும் ராஜராஜன்


படங்கிடங்கர்ச் சனைபுரியும்
பயோதரங்கண் வளர்மாடப்
பந்தி யும்போர்

தொடங்கிடங்கர் தெலுங்கர்வங்கர்
துளுவர்கரு நாடருயிர்
துடிப்புற் றோட

வுடங்கிடங்கர்க் குலம்பிறழ்பற்
பேழ்வாயங் காப்பினுட
னுலாவு கின்ற

தடங்கிடங்கர் களுந்திகழு
மூற்றுமலை மேவியவா
சராச ராசன் 329

வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணப் பெருமாளுக்கு நேசன்


தடங்கான கத்தனத்தி
னொடுநடந்தோன் பழவடியர்
தமக்குத் தாய்க்கெண்

மடங்கான கத்தனத்தி
னகரனைப்போ ரிடைமறைத்தோன்
மகர மூருங்

கிடங்கான கத்தனத்தி
நிகர்சுருபன் கோவியராங்
கிளரும் வம்புக்

கடங்கான கத்தனத்தி
யரைப்புணர்வீ ரைக்கடவுட்
கதிக நேசன். 330

இருதயாலயப் பெயர்கொண்ட அற்புத சுசீலன்


பெட்பரத னத்துடன் பொன்
மலையிரண்டு பிறந்ததெனப்
பெருத்துக் கச்சுக்

குட்பரத னத்துணைகள்
புதைக்கவடங் காதுகிழித்
துருவ வன்பாந்

தட்பரத னத்துறழ்கந்
தரமடவா ரமிழ்துகைத்துத்
தனது செவ்வாய்ப்

புட்பரத னத்துறைச்செ
யிருதயா லயப்பேரற்
புதசு சீலன் 331

லட்டுச் சுமை - உ.வே.சாமிநாதையர்

லாடு லட்டுச் சுமை - உ.வே.சாமிநாதையர்
______________________________

இராமநாதபுரம் ஜில்லா வேம்பத்தூர் வாசியான சிலேடைப்புலி பிச்சுவையரைப்
பற்றிப் பலர் கேட்டிருப்பார்கள். அவர் வியக்கத்தக்க வண்ணம் அதிவிரைவில்
கவிபாடும் ஆற்றலையுடையவர். திருவாவடுதுறையில் சின்னப்பட்டத்திலிருந்த
ஸ்ரீ நமச்சிவாய தேசிகரவர்களிடம் பாடம் கேட்டவர். இராமநாதபுரம் ராஜா ஸ்ரீ
பாஸ்கர ஸேதுபதி அவர்களால் மிகவும் ஆதரிக்கப்பெற்றவர். அவரிடம்
சுப்பையரென்னும் ஓரிளைஞர் அடிக்கடி வந்து பாடங்கேட்டு வந்தார்.
பிச்சுவையர் வெளியூருக்குப் போகையில் சுப்பையரையும் அழைத்துச்
செல்வதுண்டு.

அக்காலத்தில் ஊற்றுமலையில் ஜமீன்தாராக இருந்தவர் ஹ்ருதயாலய
மருதப்பத்தேவர் என்பவர். அவருடைய கல்வியறிவும் ஆற்றலும் நற்குணங்களும்
மிக உயர்ந்தவை. தமிழ் வித்துவான்களிடத்தும் ஸங்கீத
வித்துவான்களிடத்திலும் அவருக்கிருந்த அன்பு யாவராலும் மறக்க இயலாதது.
வீண்காலம் போக்காமல் காலவரையறைப்படி ஒழுங்காக எல்லா வேலைகளையும்
திருத்தமுறச் செய்வார். தம்முடைய ஜமீன் ஸம்பந்தமான வேலைகளையும் மற்ற
காரியங்களையும் அவ்வப்போது செய்வதால் உண்டாகும் அயர்ச்சியை அவர் தமிழ்
நூலாராய்ச்சியால் ஆற்றிக் கொள்வார். தினந்தோறும் கலையில் 8-மணி முதல் 10-
மணி வரையிலும், மாலையில் 2-மணி முதல் 4-மணி வரையிலும் புலவர்களைக் கொண்டு
நல்ல தமிழ் நூல்களை வாசிக்கச் செய்து கேட்பதும் அப்புலவர்கள் அங்கங்கே
கூறும் நயமான பொருள்களையறிந்து உவப்பதும் தாமே எடுத்துக் கூறுவதும்
அவருக்கு இயல்பு. இதற்கென்றே தம்முடன் சில புலவர்களை வைத்து ஆதரித்து
வந்தார்.

ஊற்றுமலை ஜமீன்தார்களுக்குக் குலதெய்வமாகிய நவநீத கிருஷ்ண ஸ்வாமியின்
ஆலயம் அவ்வூரில் இருக்கிறது. அங்கே நித்திய நைமித்திகங்கள் சிறப்பாக
நடைபெறும். பெரிய கோயில்களுக்கு நடைபெறுவனபோன்ற சிறப்புக்களை அங்கே
பார்க்கலாம். அதற்குரிய நித்தியப் படித்தரம் பத்து வராகனென்று கேள்வி.
அந்தக் கோயிலின் நைவேத்தியங்களுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. பல
வர்க்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேங்குழல் முதலிய
பக்ஷியவகைகளும் கண்ணபிரானுக்கு நிவேதனம் செய்யப்படும். எல்லாம்
புத்துருக்கு நெய்யிற் செய்யப்படுவன. ஒரு லாடு உரித்த தேங்காயளவு
இருக்கும். தேங்குழல் பெரிய சந்தனக் கல்லளவு இருக்கும். இவ்வளவு
விசேஷமான நைவேத்தியங்களை ஒவ்வொரு நாளும் அங்கே காணலாம். உத்ஸவ
காலங்களில் இவை பன்மடங்கு சிறப்பாக இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஹ்ருதயாலய மருதப்பத்தேவர் புலவர்களிடம் காட்டும் அன்பைப் பலவகைகளில்
அறியலாம். அவர்களுக்கு உரிய சம்மானங்களை அளிப்பதோடு நவநீத கிருஷ்ணனுடைய
பிரசாதத்தையும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வெறுக்கும் வரையில் அளிக்கச்
செய்வார். சில சமயங்களில் புலவர்களுக்குப் பக்ஷியங்களைக்
கொடுத்தனுப்புவதும் உண்டு.

நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் உத்ஸவத்துக்கு ஒரு சமயம் பிச்சுவையர்
சுப்பையரையும் உடன் அழைத்துக்கொண்டு ஊற்றுமலை போயிருந்தார். அவரிடம்
ஜமீன்தாருக்கு மிக்க அன்பு உண்டு. அவருடைய சாதுரியமான செய்யுட்களைக்
கேட்டுப் பொழுது போக்குவதில் ஜமீன்தார் சலிப்படைவதில்லை. உத்ஸவம் நடந்த
பிறகு பிச்சுவையர் தம் ஊருக்குப் புறப்பட்டார். வழக்கப்படி அவருக்கு
அளிக்கவேண்டிய சம்மனங்களை அளித்த ஜமீன்தார், "உங்களுக்கென்று இரண்டு
மூன்று நாள் பிரசாதங்களை எடுத்து வைக்கச் சொல்லியிருக்கிறேன். அவற்றைக்
கொண்டுபோய் உங்கள் குழந்தைகளிடம் கொடுக்கவேண்டும்" என்றார்.
பிச்சுவையரிடம் அவை கொடுக்கப்பட்டன. அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி
எடுத்துக் கொள்ளுகையில் உடன் வந்த இளைஞராகிய சுப்பையர், "நான் எடுத்து
வருகிறேன்" என்று சொல்லி வாங்கிக்கொண்டார். சுமை சிறிது பெரிதாகவே
இருந்ததால் சுப்பையர் அதைத் தம் தலையில் வைத்துத் தூக்கி வந்தார்.

வழியில், பிச்சுவையர் சிறிது தங்கிச் செல்ல நேர்ந்தது; "நீ முன்னே போ;
நான் சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லி இவரை முன்னே
அனுப்பினார். இவர் சிறிது தூரம் சென்றார். நடந்து வந்ததனாலே களைப்பு
ஏற்பட்டது; பசியும் உண்டாயிற்று. இவர் உடனே பக்ஷிய மூட்டையைக் கீழே
வைத்தார். அதன் மணம் இவர் மூக்கைத் துளைத்தது; நாவில் நீர் ஊறிற்று.
அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே மூட்டையை அவிழ்த்துச் சிறிது சிறிதாகப்
பக்ஷியத்தைச் சுவை பார்க்கலானார். அதன் சுவை இவரைத் தன்
வசப்படுத்திவிட்டது. பின்னால் பிச்சுவையர் வருவாரென்ற நினைவில்லாமல் ஒரே
ஞாபகத்தோடு அந்த வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார்.

சிறிது நேரம் சென்றது. "என்னடா பண்ணுகிறாய்?" என்ற குரலைக் கேட்டவுடன்
சுப்பையர் திடுக்கிட்டார். இவர் பக்ஷியங்களை ஊக்கத்தோடு
தின்றுகொண்டிருக்கும் காட்சியைப் பிச்சுவையர் பார்த்து வியந்தார்;
"என்னிடம் சொன்னால் நான் வேண்டாமென்றா சொல்லுவேன்?" என்று கேட்டார் அவர்.

சுப்பையர்:- நான் என்ன செய்வேன்! கால் வலித்தது; பசியும் உண்டாயிற்று.
இப்படிச் செய்வதைவிட வேறு வழியேது?

பிச்சுவையர், "அதற்காக இப்படி வழியிலே மூட்டையைப் போட்டுக்கொண்டா
தின்னவேண்டும்? சரி, மூட்டையைத் தூக்கு" என்று சொல்லிக் கொண்டே அதனைக்
கட்டிச் சுப்பையரிடம் கொடுக்கலானார்.

உடனே சுப்பையர் தம் கையிலிருந்த பக்ஷியங்களைத் தின்று கொண்டே,
"இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவது மியல்பு தானோ?" என்றார்.
ஒரு பாட்டின் ஓரடியாக இருந்தது அது.

பிச்சுவையர், "நீ செய்யுள் கூடச் செய்வாய் போலிருக்கிறதே!" என்று
பின்னும் வியப்புடன் கூறினார்.

சுப்பையர்:- எல்லாம் உங்களுடைய ஆசீர்வாதந்தான்.

பிச்சுவையர்:- சரி, அப்படியானால் உன் கையிலுள்ள பக்ஷியத்தைத் தின்று
பூர்த்தி செய்து விட்டு அந்தச் செய்யுளையும் பூர்த்தி செய்.

சுப்பையர் அங்ஙனமே பூர்த்தி செய்தார். அந்தச் செய்யுள் வருமாறு:-

(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)

எச்சகமும் புகழ்படைத்த தொன்னூற்று மலைமருதப்
...பேந்த்ரன் போற்றும்
நச்சரவி னடிப்பவர்க்கு நைவேதித் திட்டதிவ்ய
...லாடு லட்டு
வச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை யாமன்மிக
...வருந்தும் வேளை
இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவதும்
...இயல்பு தானோ.

பூசைத் தாயார்

பூசைத் தாயார்

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம்



ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர். வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் தென்மலையார். வடகரை ஸ்தானாதிபதியாக இருந்த பொன்னம்பலம் பிள்ளை பல படையுடன் சேற்றூராருக்கு உதவியாக நின்று தென்மலையாரை வென்றனர். அதன்பின் தென்மலையும் அதற்கு உதவியாக நின்ற ஊற்றுமலை ஜமீனும் தம்முடைய நிலையிற் குலைந்தன. ஊற்றுமலை ஜமீன்தார் அப்பகைவர் கையில் அகப்பட்டார்: அவர் தம்முடைய மனைவியாரையும் இரண்டு சிறு பிள்ளைகளையும் விட்டு இறந்தனர்.


அவர் மனைவியாரின் பெயர் பூசைத்தாயாரென்பது. அவர் தம் குழந்தைகளுக்காகவே உயிர் வைத்திருந்தனர். குழந்தைகளில் மூத்தவர் மருதப்பத் தேவர்; இளையவர் சீவலவ தேவர் என்பார். பூசைத்தாயார் தெய்வ பக்தியும் தைரியமும் தமிழிற் சிறந்த பயிற்சியும் உடையவர். ஊற்றுமலை ஜமீன் அரண்மனையில் அடிக்கடி வித்துவான்களுடைய பேச்சுக்கள் நடந்து வருகையில் அவ்வம்மையார் ஜமீன்தார் அருகிலிருந்து அவற்றைக் கவனிப்பது வழக்கம்; ஆதலின் செய்யுட்களின் சுவை தெரிந்து அனுபவிக்கவும் புதிய செய்யுட்களை இயற்றவும் ஆற்றலுடையவராக ஆனார்.


தம்முடைய கணவர் இறந்தபோது,"மிகவும் இளைஞர்களாக இருக்கும் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது!" என்று அவர் மனம் ஏங்கினார். ஊற்றுமலையில் தனியே இருப்பின் தம் குலக்கொழுந்துகளாகிய அவ்விருவருக்கும் ஆபத்து வருமென்று பயந்து தென்காசிக்குச் சென்று அங்கே அடக்கமான வாழ்க்கையை நடத்தி வருவாராயினர். புலமை நிரம்பிய பெண்மணியாராதலின் கல்வியினால் உண்டாகும் பெருமையே பெருமை என்றுணர்ந்து எவ்வாறேனும் தம் மக்களுக்குக் கல்வியறிவூட்டவேண்டு மென்னும் ஊக்கமுடையவராக இருந்தார். தென்காசியில் இருந்த பள்ளிக்கூடமொன்றில் தம் குமாரர் இருவரையும் சேர்ப்பித்துப் படிக்கச் செய்தார்.


அவ்விருவருள் இளையவராகிய சீவலவ தேவர் நல்ல லக்ஷணமும், வசீகரமான தோற்றமும் உடையவர். தைரியமும், சோம்பலின்றி உழைக்கும் ஊக்கமும் அவருக்குப் பிறவியிலே அமைந்திருந்தன. பிறர் உள்ளக் கருத்தைக் குறிப்பாக அறியும் நுண்ணறிவும் அவர் பால் இருந்தது. அவருடைய முகத்தைப் பார்த்துப் பூசைத்தாயார், "இவனால் நாம் ஈடேறலாம்" என்று எண்ணி மகிழ்ந்து வந்தார்.


ஒரு நாள் சகோதரர் இருவரும் பள்ளிக்கூடம் செல்லும்போது அத்தலத்தில் உள்ள தேரடியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டபோது இளங்குழந்தையாகிய சீவலவதேவருக்குத் தாமும் விளையாடவேண்டுமென்னும் ஆசை உண்டாயிற்று. சிறிது நேரம் அவர்களோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினார். அவருடைய தமையனாராகிய மருதப்பத் தேவர் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டதென்று கூறினார். அதனைக் காதில் வாங்காமல் சீவலவதேவர் விளையாடிக் கொண்டே இருந்ததனால், மூத்தவருக்குக் கோபம் மூண்டது; உடனே தம்பியை அடித்துப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போனார்.


சீவலவதேவர் மானமுள்ளவராதலின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து தாயாரைக்கண்டவுடன் கோவென்று அழத் தொடங்கினார். தம்முடைய கண்மணியைப் போன்ற குழந்தை அங்ஙனம் எதிர்பாராதவிதமாக அழுவதைக் கண்ட பூசைத்தாயாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விசாரித்தபோது விஷயம் தெரிந்தது. குற்றம் இருவரிடமும் இருப்பதாக அவர் எண்ணினார். கல்வியே செல்வமென்று எண்ணி அவர்களைப் படிக்கவைத்தவராதலின் இளையபிள்ளை விளையாட்டிற் போதைக் கழித்தது குற்றமென்பதும், இருப்பினும் நல்லுரை கூறாது இளங்குழந்தையை அடித்தது மூத்தவரது குற்றமென்பதும் அவர் கருத்து. யாரை நோவது?? "எல்லாம் நம்முடைய பழைய நிலையிலிருந்து மாறியதனால் உண்டாகியவையே" என்று எண்ணும்போது பூசைத்தாயாருக்குத் துக்கம் பொங்கி வந்தது. தம்முடைய உள்ளுணர்ச்சியை வெளிப்படையாக அந்தக் குழந்தைகளுக்கு உணர்த்தத் துணியவில்லை. ஆயினும் தமிழ்க் கல்வியறிவுடைய அப்பெண்மணியார் ஒரு செய்யுளால் அதை வெளியிட்டார். அது வருமாறு:

"தேரோடு நின்று தெருவோ டலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடு வோமிந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண் டாலிந்தத் தீவினைகள்
வாராவ டாதம்பி சீவல ராய மருதப்பனே."

இச்செய்யுளைச் சொல்லும்போதே அவர் கண்களில் நீர் துளித்தது.

அடிபட்ட சீவலவ தேவர் தம்முடைய துக்கத்தை மறந்தார். தம் தாயார் அவ்வாறு வருந்துவதற்குக் காரணமென்ன என்பதில் அவர் மனம் சென்றது. தங்களை அன்போடு பாதுகாத்துவரும் அன்னையார் வருந்துவதைக் கண்டபோது அவர் மனம் உருகியது. துணையற்ற நிலையில் இருந்தாலும் தம் உள்ளத்துள் இருந்த துயரத்தை அதுகாறும் அவ்வம்மையார் வெளியிட்டதேயில்லை; தைரியமாகவே இருந்து வந்தார். தம்முடைய பழைய நிலையையும் குழந்தைகளுக்குச் சொல்லவில்லை. அன்றைத்தினமோ வருத்தம் அடக்குவதற்கு அரிதாகிவிட்டமையால் அந்தச் செய்யுளைக் கூற நேர்ந்தது.


ஒருநாளும் வருந்தாத தாயார் அங்ஙனம் வருந்துவதைக் கண்டு பொறாத இளையவர், "நம்மால் அல்லவா இந்த வருத்தம் தாய்க்கு வந்தது!" என்று எண்ணி அதிகமாக அழுதார். " நீ என்னம்மா இப்படி வருத்தமடைகிறாய்? இதற்குக் காரணம் என்ன? சொல்லத் தான்வேண்டும்" என்று பிடிவாதம் செய்தார். தாயார் வேறு வழியில்லாமல் எல்லாச் செய்திகளையும் குழந்தைகளிடம் சொல்லி வருந்தினார்.


"இனிமேல் எப்படி அம்மா நாம் பழைய நிலைக்கு வரமுடியும்?" என்று சீவலவதேவர் கேட்டார்.


"ஆண்டவன் அருள் செய்யவேண்டும். இப்போது வடகரையார் மிக்க பராக்கிரமம் கொண்டு விளங்குகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் நம்மைப் பழையபடியே நிலைநாட்டலாம்." என்றார் பூசைத்தாயார்.


"வடகரை யரசரை நான் போய்ப் பார்த்து வரட்டுமா, அம்மா?" என்று தைரியத்துடன் சீவலவ தேவர் கேட்டார்.


"உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா? வடகரை சமஸ்தானாதிபதியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமான காரியமல்லவே!"


"பின் என்ன செய்வதம்மா?"


"பார்க்க முடியாது. ஆனால் ......"


தாயார் சிறிது யோசித்தார். அவர் மனத்தில் ஏதோ ஒரு புதிய கருத்து உதித்தது.


"பொன்னம்பலம் பிள்ளையென்பவர் அந்த சமஸ்தானத்தில் ஸ்தானாதிபதியாக இருக்கிறார்; அவர் மிகவும் நல்லவர்: தமிழில் சிறந்த புலமையுடையவர். அவர் மனம் வைத்து நமக்கு உதவி செய்ய இசைந்தாரானால் ஸமஸ்தானாதிபதியும் இணங்குவார்." என்று தயார் கூறினார்.


"அவரையே போய்ப் பார்த்து வருகிறேன், உன்னுடைய அன்பையும் ஆண்டவன் கிருபையையும் துணையாகக் கொண்டு நான் போய்வருகிறேன்." என்று சீவலவதேவர் முன் வந்தார்.


வீரக்குடியிற் பிறந்த பெண்மணியாராகிய பூசைத்தாயாருக்குத் தம் மகனிடத்தில் அளவற்ற நம்பிக்கை இருந்தது. "போய் வா" என்று வாழ்த்தி அனுப்பினார்.


சீவலவதேவர் தென்காசியிலிருந்து புறப்பட்டுச் சொக்கம்பட்டிக்கு வந்து பொன்னம்பலம் பிள்ளையின் வீட்டை விசாரித்துக் கொண்டு சென்று அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நடுப்பகலாதலின் உள்ளே பொன்னம்பலம் பிள்ளை நீராடிப் பூஜை பண்ணி விட்டு ஆகாரம் செய்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அரண்மனையிலிருந்து, "மகாராஜா உடனே வரச் சொன்னார்" என்று ஒரு சேவகன் வந்து அழைக்கவே விரைவாக ஆகாரம் அருந்தி எழுந்தார். கரசுத்தி செய்துகொண்டவுடன் அரண்மனைக்குச் செல்லும்பொருட்டு வெளியே வருகையில் அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்த இளைஞராகிய சீவலவ தேவர்மேல் அவர் பார்வை சென்றது. அவருடைய அழகிய முகத்தின் வசீகர சக்தி பிள்ளையின் உள்ளத்திற் பதிந்தது.


"நீ யாரப்பா?" என்று ஸ்தானாதிபதி வினவினார்.


சீவலவ தேவர் தாம் இன்னாரென்பதை அறிவித்தார். ஊற்றுமலை ஜமீன்தாரிணி நன்றாகப் படித்தவரென்பதை முன்னரே பொன்னம்பலம் பிள்ளை அறிந்திருந்தார். அவ்வம்மையாருக்கு இரண்டு இளங்குழந்தைகள் இருப்பதையும் கேள்வியுற்றிருந்தார். ஆதலின் சீவலவதேவர் இன்னரென்று தெரிந்தவுடன் அவருக்குத் திடுக்கிட்டது. அவர், "இங்கே யாரேனும் உம்மை இன்னாரென்று தெரிந்து கொண்டால் உம்முடைய தலை தப்பாதே!" என்று அஞ்சினார்.


"ஆண்டவன் திருவருளின்படியே எல்லாம் நடைபெறும்" என்றார் இளைஞர்.


அவ்விளைஞர் காட்டிய பணிவு பொன்னம்பலம் பிள்ளைக்கு மனக்கசிவை உண்டாக்கியது. அப்பொழுதே, "இவர்களைப் பழைய நிலையில் வைத்துப் பார்க்கவேண்டும்," என்ற சங்கற்பத்தைச் செய்து கொண்டார். பிறகு மிக்க களைப்புடன் இருந்த சீவலவதேவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உணவு செய்யச் சொல்லிவிட்டு, "இங்கே படுத்து இளைப்பாறிக்கொண்டிரு; நான் அரசரிடம் சென்று வருகிறேன். ஒருவரிடமும் தாம் இன்னாரென்று தெரிவிக்கவேண்டாம்" என்று சொல்லி அரண்மனைக்குச் சென்றார்.


பொன்னம்பலம் பிள்ளை தம்முடைய தலைவராகிய சின்னணைஞ்சாத்தேவரிடம் அவர் அழைத்த விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கையில், "நம்மால் அழிக்கப்பட்ட ஊற்றுமலையார் வேறு சிலருடைய உதவியை நாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அந்த ஜமீன் பரம்பரையில் இரண்டு இளைஞர்களே இருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் நேரே பகைமையில்லை. சமூகத்துக்குப் பரம்பரையாக அவர்கள் உறவினர்களல்லவா? சேற்றூராருக்கும் தென்மலையாருக்குமே பகை. சேற்றூராருக்கு நாம் உதவி செய்தோம்; தென்மலையாருக்கு அவர்கள் உதவி செய்தார்கள். அங்ஙனம் உதவி செய்த ஜமீன்தாரும் இப்போது இல்லை. ஊற்றுமலை ஜமீன் தமிழ்ப்புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் புகழையுடையது. அதன் அழிவுக்கு நாமே காரணமாக இருந்தோம். இப்போது மீட்டும் அந்த ஜமீனை நாமே நிலை நிறுத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகும்; அநாவசியமான பகையுணர்ச்சியும் இல்லாமற்போம்! என்றார்.


'நீர் எப்படி செய்தாலும் நமக்குச் சம்மதமே! என்று கூறினார் ஸமஸ்தானாதிபதி.


பொன்னம்பலம் பிள்ளை உடனே தென்காசிக்குப் பல்லக்கு அனுப்பிப் பூசைத்தாரையும் மருதப்பத் தேவரையும் வருவித்தார். அவர் பூசைத்தாயாரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தார். தமிழ்ப்புலமையையுடைய அவரைச் சந்தித்தபோது பொன்னம்பலம் பிள்ளைக்கு அளவற்ற வருத்தம் உண்டாயிற்று; "இவ்வளவு சிறந்த அறிவுடைய இவரை இந்நிலைக்கு உள்ளாக்கியதற்கு நாமல்லவோ காரணம்!' என்று இரங்கினார்.


அப்பால் பூசைத்தாயாருக்கும் அவர் குமாரர்களுக்கும் தக்க வசதி அமைக்கப் பட்டது.


பொன்னம்பலம்பிள்ளை ஏவலாளர்களுடன் ஊற்றுமலை சென்று அங்கே பழுதுபட்டிருந்த கோட்டை, அரண்மனை முதலியவற்றைச் செப்பஞ் செய்வித்தார். பிறகு நல்ல லக்கினத்தில் கிருகப்பிரவேசம் நடத்த ஏற்பாடு செய்து, வடகரையிலிருந்து பல்லக்கில் ஊற்றுமலை ஜமீன்தாரிணியையும் இரண்டு குமாரர்களையும் வருவித்தார். கிரகப்பிரவேசம் மிகவும் விமரிசையாக நடந்தது. நல்லவேளையில் தமக்குரிய நிலையைப் பெற்று அவர்கள் மகிழ்ந்தார்கள்.


ஊற்றுமலையில் மீட்டும் வாழ்வோமென்று நம்பிக்கையை முழுதும் இழந்திருந்த பூசைத்தாயாருக்கு அந்நிகழ்ச்சி அளவிறந்த விம்மிதத்தை உண்டாக்கியது. பொன்னம்பலம் பிள்ளையே அதற்குக் காரணமென்பதை அவர் அறிந்தார். தம்முடைய நன்றியறிவை அவர் ஒரு பாடலால் தெரிவித்துக் கொண்டார். அது வருமாறு:

"கூட்டினான் மிகுந்த பா ளையக்காரர் சேகரத்தைக் குறைவ ராமல்
சூட்டினான் மணிமகுடந் துரைபெரிய சாமிசெய்யுஞ் சுகிர்தத்தாலே
*தீட்டினா னம்பலம்பொன் னம்பலத்தான் றிரிகூடவரையிற் கீர்த்தி
நாட்டினா னூற்றுமலை நாட்டரசு தழைக்கநி லை நாட்டினானே."

பூசைத்தாயாரின் பொறுமையும் புலமையும் அவர்களுடைய நன்மைக்குக் காரணமாயின; தம்முடைய அரசை நிலைநாட்டித் தழைக்கவைத்த அமைச்சர் பிரானாகிய பொன்னம்பலம் பிள்ளையை அவர்கள் தம் குலதெய்வமாகவே போற்றிவந்தனர்.


அடிக்குறிப்பு:

  • அம்பலமென்றது திருக்குற்றாலத்துள்ள சித்திர சபையை: அதனைப் பொன்னம்பலம் பிள்ளை புதுப்பித்தாரென்று தெரிகிறது.

பங்களிப்பாளர்கள்

Thanks All : Subashini Tremmel, R.Devarajan

ஊற்றுமலை ஜமீன் தார்

ஊற்றுமலை ஜமீன் தார்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு அருகில் உள்ளது
ஊற்றுமலை. வீரகேரளன்புதூர் என்னும் ஊர்தான் அந்த ஜமீனின் தலைநகர்.
வீரை என்றும் அதனைச்சொல்வர்.
அங்கு நவநீதகிருஷ்ணன் கோயில் ஒன்றுஉண்டு. அதுதான்
ஊற்றுமலை ஜமீன்தார்களுக்கு குலதெய்வம்.அன்றாடப்பூசைகளும் விழாக்களும்
விமரிசையாக நடக்கும் கோயில் அது.ஒருநாளைக்கு ஆகும் படிதரம் பத்து
வராகன்!

வராகன் என்பது ஒரு பொன்நாணயம். அதுவிஜயநகரப் பேரரசின்
செலாவணியில் விளங்கியது. ஒருபுறத்தில் பன்றியின் உரு இருக்கும்.
சாளுக்கியர்களின் முத்திரையும் வராகம்தான். அவர்களின் வழியில் வந்ததாகக்
கருதிக்கொண்ட விஜயநகர அரசும் அதேமுத்திரையைக் கைக்கொண்டுவிட்டது.
இன்னொரு பக்கத்தில் கோபுர உரு பொறிக்கப்பட்டு விளங்கியது.
ஆகையால் ஆங்கிலேயர்கள் அதனை pagoda என்று அழைத்தனர். இது
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர்வரையில்செலாவணியில் இருந்தது.
பின்னரே ரூபாய்க்கு வழிகொடுத்து அடியோடு ஒதுங்கிக்கொண்டுவிட்டது.
அக்காலத்தில் ஒரு வராகன் என்பது மூன்றரை வெள்ளி ரூபாய்களுக்குச்
சமம். 54 கிராம் எடையுடையது. அதாவதுஆறேமுக்கால் பவுன் எடை கொண்டது.
வராகன் என்னும் நாணயம் மறைந்துவிட்டாலும்கூட ஏட்டளவில்
வழக்கத்தில் அது மிக அண்மைக்காலம்வரை இருந்துவந்தது.
நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில்
வாணிபத்தின் பேரில் கடல்கடந்துசெல்லலானார்கள். அவர்கள் லேவாதேவி
நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார்கள்.
ஒரே செட்டியாருக்கு பல இடங்களில் நிறுவனங்கள் இருக்கும். ஒரு
லேவாதேவி நிறுவனம் ஒரு மார்க்காஎனப்படும். ஓரிடத்திலேயே ஒன்றுக்கு
மேற்பட்ட மார்க்காவை ஒரே ஆள் வைத்துக்கொள்ளலாம். அதுபோல ஒரே
மார்க்கா பல இடங்களில் இருக்கும்.
இந்த நெட்வர்க்கிற்கு பல ஊழியர்கள்தேவைப்பட்டனர்.
ஒரு மார்க்காவின் முதலாளி 'பெரியசெட்டியார்' எனப்பட்டார். மேலாள்,
அடுத்தாள், பெட்டியடிப்பையன், ஓடும்பிள்ளை, சமையற்காரன் என்று பல
ஊழியர்கள் இருப்பார்கள்.
செட்டிநாட்டின் பல ஊர்களிலிருந்து அவர்கள் திரட்டப்பட்டார்கள்.
ஒரு மார்க்காவில் வேலைக்குச் சேருமுன்னர் ஒப்பந்தம் ஒன்று செய்யப்படும்.
இதனை 'இசை வருத்தமான சீட்டு' என்றுசொல்வார்கள். அதில்
கப்பலேறும் டிக்கெட், முன்செலவுத் தொகை, கைச்செலவுத்தொகை,
சம்பளம்சாடிக்கை, சலவைக்கூலி, வெற்றிலைச்செலவு, சாப்பாடு, வேட்டிதுணிமணி,
போன்றவை 'கண்டிருக்க' ப்பட்டிருக்கும்.
சம்பளம் குறைவாக இருந்து கட்டிப்படியாகாமல் போய்,மார்க்கா நட்டத்தில்
ஓடி கவிழ்ந்து போய், சம்பளமே கொடுபாடாமல் போய், அல்லது இந்தமாதிரி
ஏதாவது நடந்துவிட்டால் அந்தப் பத்திரம் உண்மையிலேயே இசைகேடான
மிக 'வருத்தமான' பத்திரமாகப்போய்விடும்.
இதில் சம்பளம் வராகன் கணக்கில்எழுதப்பட்டிருக்கும். ஆனால்
அதற்கு இணையான ரூபாய், டாலர், கில்டர்,ரூப்யா போன்ற
நாணயங்களிலேயேதான் கொடுக்கப்படும்.
So much so for வராகன்.
(இதையெல்லாம் இடம் கண்ட இடத்தில் எழுதி விடவேண்டும் என்றுதான்
எழுதுகிறேன். இனிமேலா யாராவது இதையெல்லாம் எழுதப்போகிறார்கள்?[sigh])
இது ஒரு ஹோலிஸ்ட்டிக் அப்ரோச்தான்.என்னுடைய பல நீள்தொடர்
கட்டுரைகளில் இதே உத்தியைத்தான்கையாண்டிருக்கிறேன். புராணங்கள்,
இதிகாசங்களில் இதே மாதிரிதான் -கதைக்குள் கதை, அதற்குள் கதை, என்று
வந்துகொண்டேயிருக்கும்.

சரி. மீண்டும் ஊற்றுமலைக்குச் செல்வோமே.

அந்த நவநீதக்கிருஷ்ணன் கோயிலில்பலவித சித்திரான்னங்கள், தேன்குழல்,
ஜிலேபி, லாடுலட்டு,போன்றவை நைவேத்தியமாகப் படைப்பார்கள். ஒரு லாடு
ஒரு தேங்காயளவும், தேன்குழல் ஒரு பெரிய சந்தனக்கல் அளவும் பெரிதாக இருக்கும்
என்று உ.வே.சாமிநாதய்யர் சொல்லியிருக்கிறார்.
சித்திரான்னம் என்பது புளியோதரை,தயிர்ச்சாதம், வெண்பொங்கல்,
சக்கரைப்பொங்கல், அக்காரவடிசில்(இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்)
தேங்காய்ச்சாதம், எலுமிச்சஞ்சாதம் போன்ற ஒன்பதுவகைச்சாதங்கள்.

ஒருமுறை வேம்பத்தூர் பிச்சுவையர் என்னும்புலவர் சுப்பையா
பண்டாரம் என்பவருடன் ஊற்றுமலைக்குச் சென்றார். அவருக்கு பரிசுகளுடன்
நிறைய நைவேத்தியத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அங்கு தனக்குக்கிடைத்த
நைவேத்தியத்தை, தின்றதுபோக மீதியை மூட்டையாகக்கட்டி சுப்பையா பண்டாரத்தின்
தலையில் ஏற்றி, சுமந்துவரச் செய்தாராம்.

அந்த நிகழ்ச்சியை சுப்பையா பண்டாரம்பாடியுள்ளார்;

எச்சகமும் புகழ்படைத்த தென்னூற்று
மலை மருதப் பேந்த்ரன் போற்றும்
நச்சரவின் நடிப்பார்க்கு நைவேதித்
திட்டதிவ்ய லாடு லட்டு
வச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை
யாமல்மிக வருந்தும் வேளை
இச்சுமையை பிச்சுவையா என் தலையில்
ஏற்றுவதும் இயல்பு தானோ!

'நச்சரவின் நடிப்பார்க்கு' என்பது காளிங்க நர்த்தனம் செய்த
கண்ணனை.

மருதப்ப பாண்டியர் என்பது ஊற்றுமலைஜமீன்தார்களில் பரம்பரைப்
பட்டப்பெயர். இப்போதுகூட எஸ். மருதப்பபாண்டியன் என்ற ஊற்றுமலை
ஜமீன் வாரிசு ஒருவர் இருக்கிறார்.

நன்னூலுக்கு சங்கர நமசிவாயப்புலவர் எழுதிய உரை மிகச்சிறந்தது
என்று போற்றப்படுவது. அதனை அவர்ஊற்றுமலையரசரின் ஆதரவோடுதான்
எழுதியிருக்கிறார். அவர் அதனை எழுதும்போது மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை
நெல்லும் தினம் ஒருபடிபாலும் கொடுக்கப்பட்டனவாம். பின்னர் பல பரிசில்கள்
வழங்கப்பெற்றார்.

பொன்மலை எனஇப் புவியில் பெருமை
மன்னிய ஊற்றுமலை மருதப்பன்......

'நன்னூற்கு உரைநீ நவையுறச் செய்து
பன்னூற் புலவர்முன் பகர்தி'என்று இயம்பலின்
நன்னா வலர்முக நகைநா ணாமே
என்னால் இயன்றவை இயற்றும்இந் நூலுள்.

என்று அந்தப்புலவர் பெருமானார்எழுதிவைத்துச்சென்றுவிட்டார்.

Thanks
ஜெயபாரதி

Thursday, August 5, 2010

Veerakeralampudur View


வீரகேரளம்புதூர்

type = village
native_name = Veerakeralampudur
other_name = V.K.Pudur, V.K.Puthur
taluk_names = Veerakeralampudur
district = [[Tirunelveli district|Tirunelveli]]
state_name = Tamil Nadu
nearest_city =TENKASI
parliament_const =TENKASI
assembly_const =TENKASI
population_total = 6483
population_as_of =
population_density =
Sex_ratio = 1089
literacy = 765
area_telephone = 04633 - 277xxx
postal_code = 627861
vehicle_code_range = TN72, TN76
climate=
|website=


Veerakeralampudur is a taluk in Tirunelveli district in the Indian state of Tamil Nadu.
வீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன்.
1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர்.
தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.
மருதப்பர் காலத்தில் 38 புலவர்கள் ஜமீனில் இருந்தனர்



Veerakeralamputhur Taluk - Revenue Villages

Number of Revenue Villages 24
Achankuttam ( 11) Agaram Anaikulam ( 4)
Karuvantha ( 9) Keelakalangal ( 6) Kulaiyaneri ( 1)
Kurichampatti ( 8) Marukkalankulam ( 22) Melakalangal ( 5)
Melamaruthappapuram ( 20) Muthammalpuram Navaneethakrishnapuram
Palapathiraramapuram Rajagopalaperi ( 15) Sivagurunathapuram
Surandai-part 1 ( 301) Surandai-part 2 ( 302) Uthumalai ( 19)
Vadakkukavalakurichi, Vadi, Veerakeralampudur,
Veeranam, Vellakkal, Zaminsurandai


== Rivers ==

The village is surrounded by two rivers [[Chittar River]] and Hanumanathi. Both Hanumanathi and Chittar River merges rightly exactly in this village thus forming the major tributary to [[Thamirabarani River]].

'''Chittar River'''

The Chittar meaning little river or Chitranathi meaning beautiful river is a nature's invaluable gift.It is the river which causes a set of splendid cascades in Courtalam and its suburbs, and international cynosure often compared to the famous Spa falls of Belgium for its curative value. It is a major tributary of the river Tamiraparani. The river takes its origin in the eastern slopes of the Western Ghats in the Courtalam hills, called Tirikoodam in literature, at an altitude of 1750m. above MSL. From its origin, the river climbs down for about six km. turns north and flows for about 16 km. before turning towards the east. Its total length is about 80 km. It joins the river Tamiraparani near Sivalapperi village of Tirunelveli Taluk.

'''Hanumanathi'''

It is a tributary of the Chittar river. It rises at an altitute of 1650m. above Courtalam in Tenkasi taluk, traverses in the slopes about 10km. receives Karuppanathi, its tributary, then it flows and merges with Chittar in this village. The anaicuts built across the river, are Mettukal anaicut, Karisalkulam anaicut, Panpoli anaicut, Vallalkulam anaicut, Elathoor anaicut, Nainaragavan anaicut, Pungamkal anaicut and Kambli anaicut .


Image:Tt_full.jpg|View of anaicut , during sunset.
Image:tt_another.jpg| Another view of anaicut.


==Schools==
* Government Hr.sec School
* Anna Boys Hr.sec School
* St. Antony's Hr.sec School
* Government Primary School
* Anna Primary School
* RC Primary School

== Colleges Near Veerakeralampudur ==
* Anna Teacher Training Institute - Veerakeralampudur
* Government ITI - Veerakeralampudur
* Sarthar Rajah Engineering College,(6km from Veerakeralampudur)Tenkasi-Alangulam road,Athiuttru, Tamizhlur, Alangulam.
* Government Arts College Surandai (6km from Veerakeralampudur)
* M.S.P.V.L.Polytechnic (10km from Veerakeralampudur) , Pavoorchatram
* Senthil Andaver Polytechnic (12km from Veerakeralampudur), Ayikudi - Tenkasi
* Sattanathar Karaiyalar arts college Tenkasi
* J.P College of Engineering (12km from Veerakeralampudur), Ayikudi - Tenkasi
* J.P Arts & Science College (12km from Veerakeralampudur), Ayikudi - Tenkasi

== Temples in Veerakeralampudur ==
*'''Arulmigu Navaneetha Krishna Swamy Temple - (Golden dwajasthambha(kodimaram) is in this temple)'''
*Arulmigu Iruthalaya Eswarar Alayam (sivan temple)
*Arulmigu Uchimahali Amman Temple
*Arulmigu Vadakkuvasal Selvi amman Temple
*Arulmigu Muppidathi Amman Temple

*R.C.Chruch
*C.S.I.Chruch


*MOSQUE near vadakku bus stop

== Railway Station ==
*Tenkasi Railway Station - 18km from Veerakeralampudur
*Tirunelveli Railway Station - 50km from Veerakeralampudur

== Airport ==
*Vagaikullam Airport (Thoothukudi) - 75km from Veerakeralampudur
*Madurai Airport - 160km from Veerakeralampudur
*Thiruvananthapuram Airport - 160km from Veerakeralampudur

== Hospitals ==
*Government Hospital
*More than 15 private hospitals in surandai 6km from Veerakeralampudur
(Dental, Surgery, Eye Clinic, Child Care)

*Veterinary Hospital

== BANK ==
==== CANARA BANK ====
*Address: 1/61/A NORTH MADA STREET,, VEERAKERALAMPUDUR 627861,
*State: TAMIL NADU
*District: TIRUNELVELI (Click here for all the branches of "CANARA BANK" in "TIRUNELVELI " District)
*Branch: VEERAKERALAMPUDUR
*Contact: 04633-277144
*IFSC Code: CNRB0001130 (used for RTGS and NEFT transactions)
*Branch Code: Last six characters of IFSC Code represent Branch code.
*MICR Code: MICR not provided

===== Central Co-Operative Bank =====

== Government Offices ==
==== Taluk Office ====
*Tahsildar Office Phone No: 04633-277140, Home Phone No: 04633-277066 Fax: 04633-277140
*Email ID: tahvkp@nellai.tn.nic.in
*Deputy Tahsildar Office Phone No: 04633-277140, Home Phone No: 04633-222035

==== Police Station ====
*Sub-Inspector Of Police Phone NO: 04633-277125

==== Sub Treasury Office ====
Sub Treasury,
04633 – 277633
Email ID: stotnv11.tndta@nic.in

==== BSNL Office ====

==== Taluk Supply Office ====
*Taluk Supply Officer --- Office Phone No: 04633-277140
*Email ID: tsotnv.veerakeralampudur@tn.gov.in

==== Post Office ====
*Details
*OfficeName Virakeralmpudur S.O
*Pincode 627861
*status Sub Office(Delivery)
*HeadOffice Tenkasi H.O
*Location Virakeralampudur Taluk of Tirunelveli District
*Telephone 04633-277877
*SPCC TIRUNELVELI-627001
*Postal Department Information : Kovilpatti Division, Madurai Region, Tamilnadu Circle.

==== EB Office ====
EB Office Phone NO: 04633-277568


== More Details ==
More details about this place could be located at http://www.veerakeralampudur.com/, http://veerakeralampudur.blog.com/, http://veerakeralampudur.blogspot.com/
{{Tirunelveli-geo-stub}}

[[Category:Villages in Tirunelveli district]]
Veerakeralamputhur, V.K.pudur, V.K.Puthur